இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் , ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இதன் போது இரண்டு நாடுகள் சம்பந்தமான பல முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வர்த்தகம், முதலீடு துறைகளில் இரு தரப்பு தொடர்புகளை அதிகரிப்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பயங்கரவாத தடுப்பு, சைபர் பாதுகாப்பு, அடிப்படைவாத எதிர்ப்பு, வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுதல், அழுத்தங்கள், புலனாய்வு பிரிவுகளை மேம்படுத்துவது உட்பட பிராந்திய ரீதியில் முக்கியமான விடயங்கள் குறித்தும் இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஆத்திரத்தை தூண்டுதல், இணையத்தளம் மூலம் முன்னெடுக்கப்படும் பொய்யான தகவல்களை பரிமாறுவதை தடுத்தல், சமய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்ல சிங்கப்பூர் அறிமுகப்படுத்தி புதிய சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.