ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய அரியாசன உரையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனது உரையின் போது சுமார் 8 நிமிடங்கள் ராஜபக்ச குடும்பத்தை பற்றி கூறினாலும் அதில் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை.
இதனடிப்படையில் ஏற்கனவே ராஜபக்ச சகோதர்கள் இடையில் அதிகார போட்டி ஏற்பட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்ட வார்த்தை மகிந்த ராஜபக்ச எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கோட்டாபய ராஜபக்ச குரக்கன் சால்வையை அடிப்படையாக கொண்ட நோக்கம் பற்றி உரையாற்றியதாகவும் அத்துடன் எப்போதும் ராஜபக்சவினரை பிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.