ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அங்கு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். தற்போது, வைத்தியசாலைக்குள் திடீரென கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் மேற்படி இரண்டு இடங்களிலுமே பொதுமக்கள் பெருமளவு நேரத்தை விரயமாக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.