யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இந்த தக்குதலிற்கு என்ன எதிர்வினையாற்றுவது என அமெரிக்கா தீர்மானிக்க முன்னரே, யாழ் வாசிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு, நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்.
தற்போது வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
மக்கள் திடீரென அதிகளவில் கொள்வனவு செய்ததால், யாழிலுள்ள அனேக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துள்ளது. இதனால் பலரும் அவதிப்படுவதை அவதானிக்க முடிந்தது.