மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா எந்த விதத்திலும் ஹெரோயின் அல்லது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர் அல்ல என்பது தனக்கு தெரியும் என ராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியலில் ஈடுபடும் போது அப்படியான நபர்களுடன் பழகவும் நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் போதைப் பொருள் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபர்களுடனும் வேலை செய்ய நேரிடும்.
அவர்களுடன் வேலை செய்வதன் மூலம் அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்.
எவ்வாறாயினும் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு வெளியான பின்னர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.