ஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஏற்படக் கூடும் என்பதால் வளைகுடாவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.