வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்டவர் இன்று காலை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
குறித்த ஆசிரியர் தமிழரசு கட்சியின் இளைஞரணியில் அங்கம் வகிப்பதுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வவுனியா நகரசபையின் உபநகர பிதாவாக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.