அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவின் நிர்வாகம் தான் ஈரானை பலப்படுத்தியது என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவர் குவாசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை, ஈரான் தொடர்ந்து எதிர்ப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரான் இவ்வளவு பலமாக என்ன காரணம் என அமெரிக்க டிரம்ப் ஒரு புதிய விடயத்தை கூறியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.
அவர் கூறுகையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக 8 ஆண்டுகள் இருந்த பராக் ஒபாமாவின் நிர்வாகம் தான் ஈரானை பலமடைய செய்தது என கூறியுள்ளார்.
அதாவது ஒபாமா தான் ஈரானுக்கு நிதியுதவி செய்து பலமடைய செய்தார் என பகிரங்கமாக டிரம்ப் கூறியுள்ளார்.
அவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர தெரிவித்துள்ளனர்