தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியான ஆலிஸ் ஜி வெல்ஸ் அடுத்த வாரம் இருதரப்பு சந்திப்புகளுக்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வரவுள்ளார்.
அவர் தனது தெற்காசியா பயணத்தை இலங்கையிலிருந்து தொடங்க உள்ளார். அவர் ஜனவரி 13-14 ஆம் திகதிகளில் கொழும்பில் இருப்பார்.
தனது சந்திப்புகளின் போது, மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார். இதில் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட நலன்கள், வளர்ச்சி, ஜனநாயகம், நீதி மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் பெசப்படும்.
இலங்கை பயணத்தின் பின்னர், வெல்ஸ் ஜனவரி 15-18 ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார். பின்னர், ஜனவரி 19-22 ஆம் திகதிகளில் அவர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருப்பார்.