இந்தியாவில் கால்நடை வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் நால்வரும் எண்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னராவது புள்ளிராஜாக்கள் திருந்துவார்கள் என பார்த்தால், பதைபதைக்க வைக்கும் அடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குஜராத்தில் 19 வயது மதிக்கத்தக்க காஜல் என்ற பெண் சீரழிக்கப்பட்டு, தூக்கிலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 1ம் தேதி காணாமல் போனதாகவும் ஜனவரி 5ஆம் தேதி அந்தப் பெண்ணை கொன்று தூக்கிலிடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட்டு தொங்க விடப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் உலுக்கியுள்ள இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணை கடத்துவது போன்ற சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் போலீசாரிடம் கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு கூட தலித் அடையாளம் ஒரு தடையாக இருந்ததாக தெரிகிறது.
காவல்துறையினர் அந்த பெண் காணாமல் போனதற்கு FIR கூட பதிவு செய்யவில்லை.
கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி கொலை குற்றவாளிகளை எண்கவுண்டரில் கொன்றதை போல, இதில் தொடர்புடையவர்களையும் கொல்ல வேண்டுமென அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Still no one arrested and no any action from Gujarat Police, It’s Gujrat model…. Kidnap,rape and murders. Gujarat police took four days to register a FIR for this horrific incidence. As a responsible and unbiased Police officer, take necessary action. #JusticeForKajal pic.twitter.com/C8wxyaS6py
— கலைவாணி (@imKalaiv) January 10, 2020
அந்தப் பெண் 5ம் திகதி கொல்லப்பட்டிருந்தாலும், 5 நாள் கழித்து இன்றுதான் சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்தது மிகப்பெரிய துயரமே. இறந்த பெண்ணிற்கு நீதி கோரி #JusticeForKajal என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.