நாட்டில் எந்த ஒரு காரணத்திற்காகவும் மத வணக்கஸ்தலங்கள் தாக்கப்பட்டால், தாக்குதல் நடத்துபவர்களிற்கு குறைந்த பட்சம் 10 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ளார்.
அத்துடன் பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துமத கோவில்கள் தாக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த தண்டனை வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் மத வணக்கஸ்தலங்கள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.