தென்றலே என்னைத் தொடு, விடிஞ்சா கல்யாணம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. சினிமாவில் இருந்த போதே திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
கணவர், மகன்கள் என வாழ்ந்து வரும் இவர் அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களுக்காக அரசு நடித்திவரும் காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறாராம்.
இந்த வேலையை தான் மன நிம்மதியுடன் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது அவரது மூத்த மகனும் சமையலில் தெரிந்த விஷயங்களை செய்து கொடுப்பாராம்.