ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.




















