பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவின் மாமா மற்றும் ரோஹித ராஜபக்ஷவின் மாமிக்கும் அரசாங்கத்தில் உயர் பதவி பதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களில் இயக்குனர் பதவிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுளள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய அவர்கள் இருவரும் விமான நிலையம் மற்றும் விமான சேவை அதிகார சபையில் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசாங்க நிறுவனத்தின் பிரதானிகள் மற்றும் அதிகார சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டது.
எந்த ஒரு தனிப்பட்ட மற்றும் அரசியல் தொடர்புடையவர்களை பிரதானிகளாக நியமிக்க கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.