கேரள மாநிலம் கொச்சியில், கட்டப்பட்ட பிரமாண்ட மாடி குடியிருப்பில் சுமார் 343 வீடுகள் உள்ளது. இந்த மாடி வீடு குடியிருப்பு விதிகளை மீறி கட்டப்பட்டதால், அந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாடி இடிக்கப்படுவதால் அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த குடியிருப்பை தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு மரடு அடுக்குமாடி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. குடியிருப்பு இடிக்கப்பட சமயத்தில் அந்த பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என அந்த மாநில போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெட்ரோலியம், வெடிபொருள் மூலமாக மரடு குடியிருப்பில் சுமார் 343 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கபட்டது.
மேலும், இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரளா – மராடுவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி வெடிவைத்து இடிப்பு!
Video – ANI#Maradu #Kerala pic.twitter.com/rtAibb5CdK— Seithi Punal (@seithipunal) January 11, 2020