ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன.
20க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதை பதைக்க வைத்தது.
இந்நிலையில் ஒரு கங்காருவின் காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உருக வைத்துள்ளது. அதில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட கங்காருவை ஒரு பெண் மீட்டு அரவணைக்கிறார். அந்த கங்காருவும் சோகமாக அவருடன் அணைத்துகொண்டது.
இந்த காட்சி இணையத்தில் வெளியானதை அடுத்து 15லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பலரும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
https://www.facebook.com/watch/?v=579646079490856