பெற்றோரின் கவனயீனத்தால் பகமுண – புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்திலுள்ள குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோக சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பகமுண வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் சடலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பகமுண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















