எமது கட்சியில் இருந்து எவரையும் வெளியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துக் கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் தன்னை மாற்றுத்தலைமை எனவும் அவர் கூறிக்கொள்கிறார்.
கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்கிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்கள் ஏன் வெளியே போனார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.
எவ்வாறாயினும், எவரையும் தாம் கட்சியிலிருந்து வெளியே அனுப்பவில்லை. பிரிந்து சென்றவர்களுக்காக கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே தமது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.