மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் குமரகுரு. இவரது மனைவியின் பெயர் லாவண்யா (வயது 33). லாவண்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்ம கும்பலொன்று வீட்டில் வைத்து வெட்டி கொலை செய்தது. இந்த நேரத்தில் லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
சீனியம்மாள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சமயத்தில்., குமரகுருவின் இல்லத்துடைய கதவு நள்ளிரவு நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது மற்றும் கண்காணிப்பு காமிராக்கள் அணைக்கப்பட்டது காவல் துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனைத்தொடர்ந்து குமரகுருவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கூலிப்படை மூலமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில்., மதுரையில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வரும் குமரகுருவிற்கு ஆடம்பரமாக வாழ ஆசை. இதனால் பணத்தினை தண்ணீர் போல செலவு செய்து வந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த எனது தந்தை முதலில் என்னை கண்டித்த நிலையில்., பின்னர் சொத்தின் ஒரு பகுதியை எனது மனைவி லாவண்யாவின் பெயரில் எழுதி வைத்தார். இதற்கு பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில்., இதற்கு பின்னர் லாவண்யாவிற்கும் – எனக்கும் பகை உருவானது. மேலும்., சொத்துக்களை எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று தெரிவித்தேன்.
அவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், லாவண்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு பாத்திரக்கடையில் பணியாற்றி வரும் மேலூர் பகுதியை சார்ந்த அலெக்ஸ் பாண்டியனிடம் தெரிவிக்கவே., மேலூரை சார்ந்த மூக்கன் (வயது 22) மற்றும் சூர்யா (வயது 21) ஆகியோரின் உதவியுடன் கொலைக்கு திட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த கொலை திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் கொலையை அரங்கேற்ற முடிவு செய்திருந்த நிலையில்., கூலிப்படைக்கு ரூ.11 இலட்சம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சின்னாளபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்ற நேரத்தில் குமரகுருவை கூலிப்படை தலையில் வெட்டியுள்ளது. லாவண்யா மட்டும் நல்ல நேரத்துடன் தப்பித்துள்ளார்.
கணவனின் சூழ்ச்சி கணவனுக்கே வினையாக திரும்பிய நிலையில்., வெட்டு தன் கழுத்திற்கு வந்ததை அறிந்து மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்துடன் மனைவியை சமாளித்துள்ளார். பின்னர் கூலிப்படையினர் பெண்ணை பொதுஇடத்தில் வைத்து கொலை செய்வது எளிதான காரியம் இல்லை என்று தெரிவிக்கவே., வீட்டில் வைத்து கொலை திட்டம் அரங்கேறியுள்ளது.
இந்த கொலைக்கு ரூ.11 இலட்சம் பேசி முடிவு செய்யப்பட்ட நிலையில்., ரூ.1 இலட்சம் முன்பணமாகவும் கொடுக்கப்பட்டது. பின்னர் கூறியபடி கொலை அரங்கேறி முடித்த நிலையில்., காவல் துறையினரின் விசாரணையில் கொடூர கணவன் அகப்பட்டுள்ளான். இதனையடுத்து கூலிப்படையை சார்ந்த அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.