176 பேர் உயிரிழந்த உக்ரேன் விமான விபத்திற்கு ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படை முழு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரேன் விமானம் மனித பிழை மற்றும் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட ஈரானின் ஆயுதப்படை தலைமையகம் அறிக்கை வெளியிட்டது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஈரான் மன்னிப்பு கோர வேண்டும், சம்மந்தப்பட்ட நபருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாக ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, என் வாழ்க்கையில் இதுபோன்ற விபத்தை நான் பார்த்ததே இல்லை. இதற்கு பதிலாக நான் இறந்திருக்கலாம்.
சம்பவத்தின் போது நான் மேற்கு ஈரானில் இருந்தேன். ஈராக்கில் அமெரிக்கா தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு இச்சம்பவம் நடந்தது.
19 கி.மீற்றர் தூரத்தில் உக்ரேனிய விமானத்தை ‘ஏவுகணை’ என்று வான் பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
மேலும் அந்த நேரத்தில் உள்ளுர் விமானங்களில் வான்வெளியில் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பாதைகள் ஒதுக்கப்படாத காரணத்தினால் அது நடக்கவில்லை.
பின், ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக வான் பாதுகாப்பு அமைப்பின் ஆபரேட்டர் தகவல் அளித்தார். அவர் விமானத்தை ஏவுகணை என அடையாளம் காட்டினார், ஆனால், தாக்க அனுமதி பெற தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.
தகவல் தொடர்பில் சிக்கில் இருந்தததால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, 10 வினாடிகளில் முடிவெடுத்து தாக்கியுள்ளார் என கூறினார்.
விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டது என்ற கருத்தை நிராகரித்த அதிகாரிகள், இந்த விவகாரம் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
விபத்துக்குள்ளான விமானம் ஐஆர்ஜிசி ஏவுககணையால் தாக்கப்பட்டது என்பதை அறிந்தவுடன், நாங்கள் பொது ஊழியர்களுக்கு உடனே அறிவித்தோம், அவர்கள் 48 மணிநேரத்தில் அதை உறுதிசெய்தனர் என விளக்கமளித்துள்ளார்.