இந்தோனேசிய நாட்டினை சார்ந்தவர் சினாஹா. இவர் கடந்த 2007 ஆம் வருடத்தில் மேற்படிப்பு விசா மூலமாக இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டருக்கு வந்த நிலையில்., மான்செஸ்டர் நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். பின்னர் கடந்த 2012 ஆம் வருடத்தில் புவியியல் துறையிலும் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில்., கடந்த 2017 ஆம் வருடத்தில் இவர் வாலிபர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 36 வயதாகும் சினாஹாவுடைய அலைபேசியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. இவர் அங்குள்ள மது பார்களுக்கு சென்று வரும் நிலையில்., மதுபான கடைகளில் இருக்கும் நபர்கள் அதிக போதை காரணமாக உதவி தேடும் சூழல்., அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் பிறரை தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கும் நபர்களை குறிவைத்துள்ளார்.
இவரது வலையில் சிக்கும் ஆண்களை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து மதுவிருந்து ஏற்பாடு செய்து பின்னர்., அவருக்கு போதை ஏறி உறங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட நபர்களும் மறுநாள் காலை எழுந்து போதை மயக்கம் என்று எண்ணி அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
இவனது வலையில் சிக்கிய 18 வயதுடைய இளைஞரை சினாஹா பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கையில்., அவனிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததை அடுத்து., இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்., இவனால் பாதிக்கப்பட்ட 190 ஆண்களில் 70 பேர் மட்டுமே தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்., பிறர் குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.