கடந்த அரசாங்கத்தில் குறைகள் நடந்திருக்குமாயின் அவற்றை சரி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பற்றி நான் பேச மாட்டேன். அவரது குரல் பதிவுகள் வெளியில் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றில் அவர் பேசியுள்ளார்.
சில குரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் கூறுகிறார். எதுவாக இருந்தாலும் அதனை பொலிஸாரிடம் விட்டு விடுவோம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும் என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த மனோ கணேசன், தற்போது எமது அரசாங்கம் ஆட்சியில் இல்லை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
புதிய அரசாங்கத்திடம் கேளுங்கள், என்னிடம் கேட்க வேண்டாம். எமது அரசாங்கம் தவறு செய்ததது என்றே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. எமது அரசாங்கத்தின் தவறுகள் பற்றி பேசுவதில் பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.