காலியில் வைத்து கடந்த வருடம் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அரசியல்வாதி மற்றும் அவரது உதவியாளரிடம் இருந்து நீதியை பெற்றுத்தருமாறு சீன பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக்கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் காவல்துறையில் முறையிட்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது தாங்கள் நீதியை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை மதித்து இந்த கோரிக்கையை தாம் முன்வைப்பதாக சீனப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதபடியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சீன பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
காவல்துறை முறைப்பாட்டுக்கு அமைய கடந்த ஜூன் மாதம் சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. எனினும் காவல்துறையினர் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் சீன பெண் தெரிவித்துள்ளார்.