மகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் தபேஸ்வரி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும், கொக்குவில் கிழக்கை சேர்ந்த மகேஸ்வரன் கஜானி (வயது 17) என்ற மாணவி கடந்த 8ம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் தாய் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த தாய் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.