நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு ஒன்று தொடர்பில் தமக்கு பின் பதவிக்கு வரும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமானேயை எவ்வாறு அனுகவேண்டும் என்று முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவுரைக் கூறிய குரல் பதிவுகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகள் உட்பட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய தொலைபேசி குரல் பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே தில்ருக்ஷியுடன் அவர் உரையாடிய குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்போது ஜெயமானேயுடன் பேசிய பின்னர் அதன் தகவல்களை மீண்டும் பகிர்ந்துக்கொள்வதாக ரஞ்சன், தில்ருக்ஷியிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த குரல் பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிக்கின்ற நிலையிலேயே இந்த குரல் பதிவு வெளியாகியுள்ளது.
தில்ருக்ஷி டயஸ் முன்னதாக அவென்ட் காட் வழக்கின் சந்தேகநபர் நிசங்க சேனாதிபதியுடன் உரையாடிய குரல் வெளியிடப்பட்ட நிலையில் அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.