எதிர்வரும் வியாழக்கிழமையன்று ஐக்கிய தேசியக்கட்சியின் பதவி நிலைகளில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த மாற்றங்களுக்கு தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக அவர் இன்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மக்களுக்கு நன்மை தரும்வகையில் கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக சுஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களுக்கு பொறுப்புக்கள் பகிரப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் யாப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.