இதுவரை நடந்த சம்பவங்களில் சில இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்போகும் போது கண்விழித்து எழுந்த சம்பவங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோன்று ஒரு சம்பவம் பாகிஸ்தானில் சமீபத்தில் இறந்துவிட்டதாக நினைந்து பெண் ஒருவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்தபோது அவர் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஷிதா என்ற பெண் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக ரஷிதா மருத்துவர்கள் கூறியதோடு, அவர் இறப்புக்கான சான்றிதழையும் வழங்கினார்கள்.
இதனையடுத்து ரஷிதாவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைப்பெற்றது. இறுதி சடங்கில் உடலை குழிப்பாட்டும் போது, அவரது கால் அசைவுகள் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் ரஷிதாவை உடனடியாக அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ரஷீதா தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.