ஐ.ஆர்.ஜி.சி படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய குடும்பங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம், மீறி பேட்டியளிப்பவர்கள் உடல்களைப் பெற மாட்டார்கள் என ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வெளிநாட்டு சேர்ந்த, பாரசீக மொழி ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கக்கூடாது என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக லண்டனை தளமாகக் கொண்ட பாரசீக மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ரேடியோ ஃபர்தா, பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்களுடனான நேர்காணலை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளதாம்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என கூறி வந்த ஈரான், நேற்று உக்ரைனின் பிஎஸ் 752 விமானத்தை சுட்டுக் வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டது. விமானத்தில் இருந்த 176 பயணிகளும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.