திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தன்னுடைய 11 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தளாய், பராக்கிரம மாவத்தையை சேர்ந்த ஆர்.ஏ.அனுர பிரதீப் (42 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி இரவு சந்கேதநபர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பின்னர் மனைவி முன் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.
இதன்போது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.