பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரை மீட்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக கூறிய நிலையில் இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே, அரசு உத்தரவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்திய இராணுவத் தலைவரின் இது போன்ற அறிக்கைகள், பொதுவாக அந்நாட்டு மக்களை அரசின் மீதுள்ள கொதிப்பிலிருந்து வெளியேற்றுவதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் ஆகும்.
இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பானர் மேஜர் ஜெனர் அசீப் கபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1994 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் முழுமையாக காலி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் உறுதியுடன் தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 ம் திகதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்று அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த இந்தியாவுககு எதிராக சர்வதேச ஆதரவை பாகிஸ்தான் தோல்வியுற்றது. அந்த சமயத்தில் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான உறவுகளை குறைத்து தூதரை வெளியேற்றியது.
அதேநேரம் இந்திய சர்வதேச சமூகம் 370ஐ நீக்குவது உள்பட ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக பார்ப்பதாவும் எனவே எதார்த்தத்தை புரிந்து கொண்டு பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.