கொழும்பு நகரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
900 மில்லியன் டொலர் முதலீட்டை சீனாவின் ஷெங்கீரிலா கூட்டு நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்ய உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீட்டு திட்டத்திற்காக லேக் ஹவுஸ் சுற்று வட்ட பிரதேசத்திற்கு அருகில் உள்ள 6 ஏக்கர் நிலம் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த முதலீட்டுக்கான ஆரம்பமாக இலங்கை அரசு 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக 500 மில்லியன் டொலரில் கலப்பு திட்டமாக ஹோட்டல், வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட உள்ளன.
அதேவேளை காலிமுகத் திடலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றும் அண்மையில் சீனாவுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.