யாழ்ப்பாணம் நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பணம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் யாழ்ப்பணம் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.