ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்த்த ஒலிம்பிக் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை நாங்கள் தான் மனித பிழை காரணமாக தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று ஈரான் ஒப்புக் கொண்டது.
இதற்கு காரணம் அமெரிக்காவுடன் இருக்கும் அழுத்தம் தான் காரணம் என்று தெரிவித்திருந்தது. அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்தியதால் ஈரான் நாட்டில் இருக்கும் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரானில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்ணான கிமியா அலிசட்என்பவர் அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறி நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக தன்னுஅவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹலோ, குட் பை., இதில் நான் எதிலிருந்து தொடங்க? ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி. அவர்கள் என்ன உடுத்த கூறுகிறார்களோ அதையே நானும் உடுத்தினேன்.
அவர்கள் கூறிய அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. யாரும் என்னை ஐரோப்பாவுக்கு அழைக்கவில்லை. ஈரான் மக்களே, நான் எங்கிருந்தாலும் ஈரானின் குழந்தைதான் என்று கூறி இருக்கும் இடத்தை குறிப்பிடமல் பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்ட அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் நாட்டை விட்டு கிமியா வெளியேறியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.
ஏனெனில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் டேக்வோண்டோவில் ஈரானுக்கு இவர் வெண்கலம் பெற்று தந்து பெருமை சேர்த்தவர்.
உக்ரேன் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ஈரான் மீது உலக நாடுகளின் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கிமியாவின் இந்த முடிவு ஈரானுக்கு சறுக்கலாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
டைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.