பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணான ஒன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்திற்கு ஏற்ப சுபீட்சமான இலங்கை, இனவாதமற்ற அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த சகல மதங்களையும் மதிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்தப் பிரேரணையை ரதன தேரர் மீளப்பெற வேண்டும். இவ்விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தால்,பல்லினங்களின் கலாசாரங்களை மதிக்கும் அனைவரும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.