பொதுவாக பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மார்பகங்கள் பெரிதாக தோற்றமளிப்பதுண்டு.
இது சில நேரங்களில் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும்.
குறிப்பாக இது ஒரு சில காலங்களிலும் மற்றும் சில நேரங்களில் உணவுகளில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் மற்றும் கர்ப்பம் போன்ற பெரிய மாற்றங்களின் போதும், பெண்களின் மார்பகங்கள் பெரிதாகும்.
அந்தவகையில் தற்போது பெண்களுக்கு எப்போதெல்லாம் மார்பகங்கள் பெரிதாகும் என இங்கு பார்ப்பாம்.
- உடல் எடை அதிகரிக்கும் போது மார்பகங்களின் அளவும் மாறுபடும். ஏனெனில் எடை அதிகரிக்கும் போது, மார்பக திசுக்களில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவும் அதிகரிக்கும்.
- கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்பகங்களின் அளவு அதிகரிக்கும்.
- கருத்தடை மாத்திரைகளை எடுத்து வந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் மார்பகங்களின் வளர்ச்சிக்கு காரணமான ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளது.
- பெண்கள் முதன் முறையாக பூப்பெய்யும் போது, உடலில் திடீரென ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், இக்காலத்தில் மார்பகங்களின் அளவில் மாறுபாடு ஏற்படும்.
- பெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடும் போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், மார்பகங்கள் பெரிதாகும். ஏனெனில் நரம்புகள் அப்போது தெளிவாக தெரியும் மற்றும் மார்பகங்கள் பெரிதாகும்.
- ஓவுலேசனுக்கு பின், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மார்பகங்களை பெரிதாக காட்டும்.
- மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் நீர்த்தேக்கத்தால், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகங்கள் பெரிதாக காணப்படும்.
- இறுதி மாதவிடாய்க்கு பின்னர், கொழுப்புச் செல்கள் வீங்கி, மார்பகங்களின் அளவை பெரிதாக்கும்