ஈரானுடன் செய்யப்பட்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா, ஈரானை தனிமைப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. ஈரான் உடன் அமெரிக்கா செய்திருந்த 2015 அணு ஆயுத ஒப்பந்தத்தை கடந்த 2018ம் வருடம் டிரம்ப் நீக்கினார்.
அதன்பின் ஈரான் மீது இரண்டிற்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்தார். இதன் பிறகு தான் அமெரிக்கா குவாசிமை கொன்றது.
இதேபோல் ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனாவும் செயல்பட வேண்டும், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஈரான் உடன் செய்திருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஈரான் உடன் செய்திருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை நீக்க ஐரோப்ப யூனியன் மறுத்துவிட்டது. இது தொடர்பாக ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலோ மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், நாட்டில் அமைதியை கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். மத்திய கிழக்கு நாட்டில், அதிருப்தி உண்டாவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் ஈரான் உடன் செய்யப்பட்டு இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஐரோப்பா தடை செய்யாது. ஈரானுக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். ஈரான் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் அவர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஐரோப்பா கூறியுள்ளது.
இதனால் அமெரிக்கா தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. தங்கள் சொல்படி தான் ஐரோப்பா நடக்கும் என்று அமெரிக்கா இத்தனை நாள் நினைத்து வந்த நிலையிலேயே இம்முடிவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.