மத்திய சிரியாவில் உள்ள இராணுவ விமான நிலையத்தை சேதப்படுத்திய வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என சிரிய இராணுவ தெரிவித்ததாக மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான சானா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல், டி4 விமான நிலையத்திற்கு எதிராக புதிய தாக்குதகளை மேற்கொண்டது. எதிரி ஏவுகணைகளுக்கு எதிராக விமான பாதுகாப்பு உடனடியாக செயல்படுத்தப்பட்டது, அவற்றின் மூலம் பலவற்றை அழிக்கப்பட்டது என்று இராணுவ வட்டாரம் சனாவிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஏவுகணைகள் டி4 இராணுவ தளத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று சானா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸின் வடக்கே ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள டி4 இராணுவ தளத்தின் மீது இரவு 10:00 மணியளவில் தாக்குதல் நடந்தது என்று தெரிவித்துள்ளது.
குறித்த டி4 விமான தளத்தை பொதுவாக ஈரான் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது,
சிரியாவின் குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, இந்த கூற்று குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லையாம்.
குறித்த டி4 இராணுவ விமான நிலையத்தில் ஈரானிய படைகள் ரஷ்ய ஆலோசகர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதே இராணுவத் தளம் கடந்த காலங்களில் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது நினைவுக் கூரத்தக்கது.