பொலன்னறுவை வெலிகந்தை பிரதேச மணல் அகழ்வு நிறுவன முன்னாள் ஊழல் அதிகாரியொருவரை அனுர குமார அரசாங்கம் மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது
கடந்த அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு வெலிகந்த பிரதேச மணல் அகழ்வுக்காக முறைகேடான வழியில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது
பின்வந்த காலங்களில் இந்த விடயம் வௌிச்சத்துக்கு வந்திருந்த நிலையில், ரணில் அரசாங்கத்தின் காலத்தில் குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது
பணி இடைநீக்கம்
இந்நிலையில் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டே வாரங்களுக்குள் குறித்த அதிகாரி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக வெலிகந்தை மணல் அகழ்வோர் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் அரசாங்கம் தொடர்பான தங்கள் அதிருப்தியையும் அவர்கள் வௌிப்ப்படுத்தியுள்ளனர்