நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் பயணிக்காத நிலையில் உள்ளது.
அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு – கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.
A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம்
அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.