கட்சியின் மதிப்பை பாதித்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ரஞ்சன் ராமநாயக்கவை தவிர மேலும் மூவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உதவி தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவத்தை தாக்கும் வகையில் செயற்பட்டதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவர்களும் ரஞ்சன் ராமநாயக்கவை போன்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்;துள்ளார்