நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில்இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கின்றேன்.
மேலும், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போமாக!
எமது பூர்வீக நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழுந்து வளமான எதிர்காலத்தை எமது வருங்கால சந்ததி கண்டுகொள்ள எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றுள்ளது.