உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போட்டி துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் சமயத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பதால் நிகழ்ச்சி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிந்ததும், மாடு பிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்புக்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் திறக்கப்படும் காளைகளை அடக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை நேரலையாக இங்கே காணலாம்.
Thanks : IBCTAMIL