யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்று இரவு அகற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கேட்கப்பட்டதற்கு அமைய யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரின் ஏற்பாட்டில் இந்த சுத்திகரிப்புப் பணிகள் இரவோடு இரவாக முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்டியுள்ள வடிகால்களில் காணப்படும் பெருமளவு கழிவுப் பொருள்களால் வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார பிரச்சனைகள் வருவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனிடம் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கோரப்பட்டது.
இதற்கு அமைவாக இன்று இரவு யாழ் மாநாகர சபையினரால் சுத்திகரிப்பு பணி இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.