எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய முன்னணிக்காக நாடு முழுவதும் பாரிய மக்கள் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து இந்த புரட்சிகரமான பேரணிகளை நடத்துவதற்கு சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய முதலாவது பேரணி நுகேகொடயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் தொகுதி அமைப்பாளர்களை, எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து திட்டங்கள் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள தலைமைத்துவ நெருக்கடி தொடர்பில் நாளையதினம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.