மனைவி, குழந்தைகளை தலையணையால் அழுத்திகொன்றுவிட்டு, கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் லக்னோவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பிந்து குப்தா (32) என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ஆர்த்தி என்கிற மனைவியும், நேஹா (8) மற்றும் நைட்டிக் (6) என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
மறுநாள் விடிந்து நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த வீட்டில் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, பிந்து தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அதேசமயம், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், பிந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியல் குழுவினர், ஆய்வு செய்து வருகின்றனர்.