தனது நான்கு மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக 47 வயது நபரை கேரள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தினசரி தொழிலாளியான அந்த நபர், கேரளாவின் வலஞ்சேரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தினமும் இரவு வீட்டிற்கு மது அருந்திவிட்டு வரும் பழக்கமுடையவர்.
அவருக்கு 17, 15, 13 மற்றும் 10 வயதுடைய நான்கு மகள்கள் உள்ளனர். அவர்கள் இப்போது பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்த மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட உள்ளார்கள். அதன்பிறகு, அவர்கள் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்ய ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இந்த விடயத்தை 10 வயது சிறுமி முதன்முதலில் தனது ஆசிரியரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், பள்ளி அதிகாரிகளின் உதவியுடன் நான்கு சகோதரிகளையும் கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் தங்களுக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூறியுள்ளனர்.
பின்னர் பள்ளி அதிகாரிகள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் படிப்பையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
நிதி ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் அருகிலுள்ள பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தொண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் வாடகைக்கு வந்த வீட்டிற்கு வந்தபோது தந்தை அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வீட்டிற்கு வந்த 17 வயது சிறுமி. பின்னர் அதே உறைவிடப் பள்ளியின் விடுதிக்கு மாற்றப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். துன்புறுத்தல் குறித்து அவர்களின் தாய்க்கு தெரியாது என்றும் கூறினார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.