ஈராக்கில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் இறுதி நிமிடங்களை அமெரிக்க ஜனாதிபதி விவரித்த ஓடியோ கசிந்துள்ளது.
சி.என்.என் வெளியிட்ட ஓடியோ படி, சுலைமானி கொல்லப்பட்டபோது வெள்ளை மாளிகை அறையில் இருந்து நடந்த தாக்குதல்களை கண்காணித்த டிரம்ப், அந்த காட்சியை விவரித்தார்.
ட்ரம்பின் 2020 மறுதேர்தல் பிரச்சாரத்துக்காகவும் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிற்காகவும் 10 மில்லியனை திரட்டிய குடியரசுக் கட்சி நிகழ்வில் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் ஜனாதிபதி பேசினார்.
நிகழ்விற்கு நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வில் டிரம்ப் பேசிய ஓடியோ பதிவை என குறிப்பிட்டு சி.என்.என் வெளியிட்டுள்ளது. எனினும், இது உண்மையில் அந்நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதா என்பது குறித்து வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்நிகழ்வில் சுலைமானியின் இறுதி நிமிடங்களை விவரித்த டிரம்ப், அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று இராணுவ அதிகாரிகள் அவரிடம் சொன்னதாக கூறினார்.
அவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் 11 வினாடிகள் உள்ளன. உயிர் வாழ இரண்டு நிமிடங்கள் 11 வினாடிகள், உள்ளன. அவர்கள் காரில் இருக்கிறார்கள், அவர்கள் பாதுகாப்பு வாகனத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வாழ ஏறக்குறைய ஒரு நிமிடம் இருக்கிறத. முப்பது வினாடிகள். பத்து, 9, 8 … ’”
பின்னர் திடீரென்று, வெடி சத்தம் கேட்டது, அவர்கள் கொல்லப்பட்டார்கள் என கூறி இராணுவ அதிகாரி தொடர்பை துண்டித்ததாக டிரம்ப் கூறினார்.
குறித்த ஓடியோவில், சுலைமானி அச்சுறுத்தல் என்று டிரம்ப் மீண்டும் கூறவில்லை என்று சி.என்.என் கூறியது. தாக்குதலுக்கு முன்னர் சுலைமானி நம் நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களைச் சொல்கிறார் என்று டிரம்ப் கூறினார், இதுவே அவரது கொலைக்கு வழிவகுத்ததாக சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.