உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கட்டிலில் கட்டிவைத்து உயிரோடு எரித்த சம்பவம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் அரங்கேறி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார்.
மிகவும் கோரமாக கொல்லப்பட்ட அப்பெண்ணின் உடல் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே கிடந்துள்ளது. கட்டிலில் கயிற்றால் கட்டப்பட்டுதான் பெண்ணை எரித்துள்ளனர் என்றும் உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கொலை நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டுகளும் சிதறி கிடந்துள்ளது. அதனால் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதன்பின்பு எரித்தார்களா என்றும் குறித்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்பது தற்போது தெரியவில்லை.
சடலம் மொத்தமாக எரிந்து கிடப்பதால், அவரை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும் என்று கூறப்படுகின்றது.
இதே போன்று உத்திரபிரதேச மாநிலம், பக்ராரிச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்னொரு பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், உடல், முகம், உடம்பெல்லாம் ஆசிட் வீசப்பட்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் இருந்து வருகின்றது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.