தமிழகத்தில் வனப்பகுதி ஒன்றில் அனுமதியின்றி காணவருடன் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணை காட்டு யானை விரட்டி சென்று மிதித்து கொன்ற சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூரில் இருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே வனப்பகுதி உள்ளது. இதை பாலமலை வனப்பகுதி என்று கூறுவர். இந்த காட்டுப் பகுதியின் அடிவாரத்திற்குள் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒருசிலர் பாலமலைக்கு அடிக்கடி நடைபயிற்சி செல்வர். ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் இல்லை.
இருப்பினும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அங்கிருக்கும் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். அது போன்று கோயமுத்தூரை சேர்ந்த புவனேஷ்வரி என்ற 40 வயது பெண் தன் கண்வர் பிரசாத்துடன், நேற்று விடுமுறை நாள் என்பதால் பாரிமலைக்கு சுற்றுலா போன்று வந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து 8 பேர் வந்துள்ளனர். அப்போது இவர்கள் விடியற் காலை நேரத்தில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
அந்த சமயத்தில் திடீரென்று காட்டு யானை ஒன்று அவர்கள் முன்பு வந்ததால், இதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து அலறி அடித்த படி ஓடியுள்ளனர்.
அப்போது காட்டு யானை புவனேஷ்வரியை மட்டும் குறித்து வைத்து விரட்டியதால், அவரின் வயது காரணமாக அவரால் வேகமாக ஓட முடியவில்லை.
அதனால் விரட்டி விரட்டி சென்ற யானை, புவனேஸ்வரியை காலாலேயே மிதித்து கொன்றுள்ளது. இதைக் கண்ட கணவர் மனைவியை காப்பாற்ற போராடிய போது, அவர் இறந்துவிட்டதால், மனைவியின் உடலை கட்டிப் பிடித்து கதறி அழுதார்.
இது குறித்த தகவ்ல உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், புவனேஸ்வரியின் உடலை மீட்டு கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவ்வளவுநேரம் தன்னுடன் ஜாலியாக பேசிக் கொண்டு வந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களில் உருக்குலைந்து உடல் கிடப்பதை கண்டு பிரசாத் கதறி அழுததாக, அவருடன் வந்தவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.