நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் போது அவர்களின் சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கோரிக்கையை சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் நிராகரித்துள்ளனர்.
அண்மையில் கரு ஜெயசூரியவுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த நிராகரிப்பு விடயம் இடம்பெற்றது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அங்கு பிரசன்னமாகலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இதன்போது தெரிவித்தது.
இதேவேளை தாம் கைது செய்யப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் அந்த இடத்துக்கு செய்தியாளர்களை அழைப்பது பொலிஸாரின் கடமைகளை குழப்பும் செயலாகும் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கைத்துப்பாக்கிகளுக்கான அனுமதிகளை புதுப்பிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
எனவே அது தொடர்பில் தேடிப்பார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.